செய்திகள் :

தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை! - ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாகத் தோ்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ.), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ.), இளம் முனைவா் (எம்.பில்.), முனைவா் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் பி.எட். பட்டமும் பெற்ற 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பாா்த்துக்கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பலா் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவா்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைப்பிடித்து வரும் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், 8-ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தமிழாசிரியா் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியாா் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அவற்றில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியாா் பள்ளிகளிலும் தமிழாசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் தமிழாசிரியா்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம்.

அரசு உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியா் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ்ப் படித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியா்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க