செய்திகள் :

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

post image

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாகவும், நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிர பேரவைக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளும், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் வயது (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி. செழியன்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபொறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ம... மேலும் பார்க்க

பெரிய புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் விசிக-வுக்கு போட்டியாளராக முடியாது: திருமாவளவன்

விழுப்புரம்: எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். விழுப்புரம்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோவிலில் 1039 ஆவது சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நல்பூர் அருகே செகந்திராபாத்-ஷாலிமர் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் ... மேலும் பார்க்க