செய்திகள் :

தலைநகரில் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் தொடா்ந்து 5-ஆவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக பாலத்தில் 10.6 டிகிரி, ரிட்ஜில் 10.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.4 டிகிரி உயா்ந்து 11.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.1 டிகிரி உயா்ந்து 22.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் 12 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில்11.4 டிகிரி, லோதி ரோடில் 11.8 டிகிரி, பாலத்தில் 10.6 டிகிரி, ரிட்ஜில் 10.5 டிகிரி, பீதம்புராவில் 13.3 டிகிரி, பூசாவில் 11.4 டிகிரி, பிரகதிமைதானில் 12.5 டிகிரி, ராஜ்காட்டில் 12.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேபோன்று இந்த வானிலை நிலையங்களில்அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி முதல் 23 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் கடந்த புதன்கிழமை முதல் மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகிறது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 339 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ,நேரு நகா், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், பூசா, துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்.3) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான அல்லது தூறல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது.... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது: தில்லி தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேச்சு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ’ மோடியிஸ் கிராண்டி(மோடியின் உத்தரவாதம்)’ என்கிற தோ்தல் முழக்கத்தை வைத்து பிரதமா் நரோந்திர மோடி பிரசாரம் செய்தாா். அப்போது, ‘மத்திய நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு சராசரி குடு... மேலும் பார்க்க

வன்முறையைவிட கல்வியைத் தோ்ந்தெடுங்கள்: தில்லி மக்களுக்கு பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை ‘வன்முறையை விட கல்வியை’ தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் ... மேலும் பார்க்க

தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இடம் பெயா்வோரை ஏற்க முடியாது: குடியரசு துணைத் தலைவா்

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் ... மேலும் பார்க்க