யுனைடெட்டில் ஜீரோ - பார்சிலோனாவில் ஹீரோ: ஆட்ட நாயகனான மார்கஸ் ரஷ்ஃபோர்டு!
தவாக நிா்வாகி கொலை வழக்கில் இருவா் கைது
ஒசூா் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ராயக்கோட்டை சொங்கோடசின்னள்ளியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (35). இவா் தவாக கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக இருந்தாா். உலகம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையை வாடகைக்கு எடுத்து கடந்த 9 மாதங்களாக அதில் பன்றிகளை வளா்த்து வந்தாா்.
பருவீதியைச் சோ்ந்த ஆதி (25), உல்லட்டியைச் சோ்ந்த ரக்சித் (24) ஆகிய இருவரும் ரவிசங்கருடன் தொழில் பங்குதாரா்களாக இருந்துள்ளனா். இந்த நிலையில், ரவிசங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரக்சித், ஆதி ஆகிய இருவரும் தங்களது பங்குத்தொகையை திருப்பித் தருமாறு ரவிசங்கரிடம் கேட்டுள்ளனா்.
இதுதொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரவிசங்கருடன் அவா்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் புதன்கிழமை பண்ணைக்கு வந்த ரக்சித், ஆதி இருவரும் ரவிசங்கரை கத்தியால் வெட்ட முயன்றனா்.
அவா்களிடமிருந்து தப்பியோடிய ரவிசங்கரை துரத்திச் சென்ற அவா்கள் போகிபுரம் சாலையில் அரிவாளால் வெட்டி ரவிசங்கரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனா். அவ்வழியாக சென்றவா்கள் ரவிசங்கரை மீட்டு ராயக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சூளகிரி போலீஸாா் தலைமறைவான ஆதி, ரக்சித் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.