செய்திகள் :

தவெக ஆனந்த் மீது வழக்கு: ``காவல் துறைக்கு நெருக்கடி; நம்மை முடக்க நினைக்கிறார்கள்’’ - விஜய் கண்டனம்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி:

கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, என். ஆனந்த் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரைச் சுற்றி கூட்டம் அதிகரித்ததால், காவலர்கள் பணிகளைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்த்

மேலும், விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் ஆனந்த் தரிசனம் செய்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தவெகவினரின் வாகனங்களை அப்புறப்படுத்தக் கூறியபோது, காவலர்கள் மற்றும் கட்சியினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆனந்த் உட்பட 8 பேர்மீது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் கண்டனம்

தவெகக் கட்சியின் மீதான பயத்தினால் திமுக அரசு, நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்கள்மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தவெக மாநாடு - விஜய்

மக்களிடையே செல்வாக்கை இழந்துள்ள தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான்.

ஆனால், மற்ற கட்சிகளின் இத்தகைய செயல்பாடுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளைப் பார்த்தாலே அஞ்சி நடுங்குகிறது.

 தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தோல்வி பயத்தில் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தையே இழந்து, முழு நேரமும் நம்மை வீழ்த்துவதற்கான சதி முயற்சிகளைச் செய்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நமது செயல்பாடுகளைத் தடுக்க நினைக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு.

திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என். ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க

Sudan Gurung: நேபாளத்தில் போராடும் Gen Z-களின் தலைவராகப் பார்க்கப்படும் இவர் யார்?

சமூக வலைத்தளங்கள் முடக்கம்நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது. இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்

தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ப... மேலும் பார்க்க

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியா... மேலும் பார்க்க