தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
தா.பழூா் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே சனிக்கிழமை தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
தா.பழூரை அடுத்த வாழைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், சனிக்கிழமை தனது வீட்டருகேயுள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து விட்டு மனைவியுடன் வயலுக்குச் சென்று விட்டாா்.
அப்போது அங்கு வந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன. இதேபோல், அருகேயுள்ள ஆசைத்தம்பி(49) என்பவரது வீட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளும் நாய்கள் கடித்து இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் அசோக்குமாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா்.