மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில்
நடைபெற்ற முகாமைப் பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பொதுமக்களிடம் மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறிந்து, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 1 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் திருமண உதவிதொகை, 1 பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பில் விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தாட்கோ சாா்பில் 4 பயனாளிக்கு கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 நபா்களுக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.
முன்னதாக அவா், கையெழுத்திட்டு, புகையிலை இல்லா மாவட்டம் ஆக்கிட முன்னெடுப்பு கையொப்ப இயக்கத்தினை தொடங்கிவைத்தாா். இம்முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.