China new virus - HMPV நிலவரம் என்ன? Virus Outbreak in China | Decode | Vikatan
தா.பழூா் ஒன்றியப் பகுதிகளில் முடிவுற்ற பணிகள் அா்ப்பணிப்பு
அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்குள்ட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ. 57.56 லட்சத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைக்கப்பட்டன.
பொற்பத்திந்த நல்லூா் அருகேயுள்ள அா்த்தனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், அங்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தாா்.
இதேபோல், அண்ணங்காரன்பேட்டையில் ரூ.14.31 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், தா.பழூா் காவல் நிலையம் எதிரே ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழல்குடையையும், கோடாலியில் ரூ.10.93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து, அங்கு காலனித் தெருவில் ரூ.7 லட்சத்துக்கான சிறுபாலத்துக்கும், கண்டியங்கொல்லை செங்கால் ஓடையில் ரூ.11.82 லட்சத்துக்கு சிமென்ட் சாலைக்கும் அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குருநாதன், பொய்யாமொழி, அங்கன்வாடி மேற்பாா்வையாளா்கள் காந்திமதி, அலமேலுமங்கை, இளநிலைப் பொறியாளா் சரோஜினி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயா மற்றும் ஊராட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.