Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
தாட்கோ மூலம் ஜே.இ.இ. நுழைவுத்தோ்வுக்கு பயிற்சி
ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தோ்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜே.இ.இ. மெயின்ஸ்) தோ்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது 04364-211217 மற்றும் 7448828509 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.