செய்திகள் :

தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243

post image

தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் ஓகே தானா..? கிட்டத்தட்ட எல்லா கணவன் மனைவி இடையிலும் இருக்கிற சந்தேகம் இது. விளக்கம் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு

’’ஓரல் செக்ஸ் இல்லையென்றால் பெண்கள் ஆர்கசம் அடைவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனென்றால், பெண்கள் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதற்கு 14 நிமிடங்கள் ஆகும். அதுவரை விந்து வெளியேற்றாமல் ஆண்களால் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது மிக மிக கடினம். அதனால், ஓரல் செக்ஸ் மூலம் உங்கள் மனைவியை முதலில் ஆர்கசம் அடைய செய்துவிடுவதே, திருப்தியான தாம்பத்திய உறவுக்கு ஒரு சுலபமான வழி.

ஆனால், பழமையான மனப்பான்மை கொண்ட கணவர்களாலும் மனைவிகளாலும் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏன் நான் கணவர், மனைவி என இருவரையும் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஓரல் செக்ஸ் அசிங்கம் என்கிற எண்ணம் இருக்கும். இன்னொரு குடும்பத்திலோ மனைவிக்கு இந்த எண்ணம் இருக்கும். இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் பல தம்பதிகளின் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது தவிர்க்கப்பட வேண்டியதாக புரிந்து கொள்ளப்படுகிறது’’ என்றவர், ஓரல் செக்ஸ் தொடர்பான தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.

வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

’’ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஓரல் செக்ஸ் பற்றி காமசூத்ரா மிக விரிவாக பேசியிருக்கிறது. தாம்பத்திய உறவில் 550 பொசிஷன்கள் அதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஸோ, தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் பற்றி இந்தியர்களுக்கு சரியான புரிதல் இருந்திருக்கிறது. அதனால்தான், நம்முடைய கோயில்களில் தாம்பத்திய உறவு தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தான், செக்ஸில் குழந்தைப் பிறப்பதற்கான பொசிஷனை தவிர்த்து மற்ற பொசிஷன்களை இயற்கைக்கு மாறான உறவு என்று  குறிப்பிட்டனர்.  

ஆனால், இப்போது அவர்களே தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸும் ஒன்றுதான். இப்படிப்பட்ட பல்வேறு நிலைகளை உள்ளடக்கியதுதான் சிறப்பான தாம்பத்திய உறவு என்பதையும் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், பெண் உறுப்பில் இருக்கிற ஜி ஸ்பாட் தான் ஆர்கசம் அடைகிற இடம் என்று வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகள் செய்து இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.  ஆக, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நம்முடைய சமூகத்தில் தாம்பத்திய உறவு தொடர்பான முழுமையான நாலேட்ஜ் இருந்தது.

தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு

ஆபாசப்படங்கள் வர ஆரம்பித்ததில் இருந்துதான், இதில் சிக்கல் வர ஆரம்பித்தது. ஆபாசப் படங்களையும், பாலியல் கல்வியும் ஒன்றுதான் என குழப்பிக் கொண்டதால்தான், தாம்பத்திய உறவின் ஒருநிலையான ஓரல் செக்ஸை அசிங்கம், தவறு, ஆபாசம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுத்தமும் விருப்பமும்தான் முக்கியம். 

’ஓரல் செக்ஸ் செய்ய ஆசைதான். ஆனா, தொண்டையில புற்றுநோய் வந்துடும்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பவர்களுக்கு ஒரு வார்த்தை. கணவன் மனைவிக்கு இடையே, அவர்கள் தங்கள் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொண்டு ஓரல் செக்ஸ் செய்யும் போது தொண்டை புற்று நோயை முற்றிலும் தவிர்க்க முடியும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். 

பால்வினை தொற்று: `இதை மறைக்கக்கூடாது' - எப்படியெல்லாம் பரவும்? நிபுணர் விளக்கம்

உலகம் எவ்வளவுதான் அப்டேட் ஆகிக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு ஒரு சில தலைப்புகளின் கீழ் அடிபடும் பேச்சுகளுக்கும், யூகங்களுக்கும் எண்ட் கார்ட் இல்லையென்றே சொல்லலாம். அதிலும் மருத்துவம் சார்ந்த கட்டுக்கத... மேலும் பார்க்க

Prostate cancer: ஜோ பைடனை பாதித்த புற்றுநோய்; வயதான எல்லா ஆண்களுக்குமே வருமா?!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு சமீபத்தில் புராஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 82 வயதான அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், பராக் ஒபாமா என பலரும... மேலும் பார்க்க

மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242

திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆன தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் வருகிற பிரச்னையைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசவிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்த... மேலும் பார்க்க

`குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?' காமத்துக்கு மரியாதை - 241

திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாத தம்பதிகள், பெரும் பதற்றத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் நிலைமை புரிகிறது. என்றாலும், அவர்களுடைய பதற்றமும், பிரச்னையை அதிகப்படுத்தலாம் என்கிறார் செ... மேலும் பார்க்க