இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 200 கோழிகள் உயிரிழப்பு
தாராபுரம் அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 200 கோழிகள் உயிரிழந்தன.
தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் மாருதி நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மகள் செல்வசரண்யா (35), கோழிப்பண்ணை வைத்துள்ளாா்.
இந்நிலையில், கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக திங்கள்கிழமை செல்வசரண்யா சென்றபோது பண்ணைக்குள் 4 வெறிநாய்கள் புகுந்து கோழிகளைக் கடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா், நாய்களை அங்கிருந்து வெளியேற்றினாா். வெறிநாய்கள் கடித்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 200 கோழிகள் உயிரிழந்தன. மேலும், 200-க்கும் மேற்பட்ட கோழிகள் காயமடைந்தன.