செவ்வாயில் வந்த கிருத்திகை: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!
காங்கயத்தில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு
காங்கயத்தில் காா் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ரஜனி நாயக்கின் இளைய மகன் ஹேமந்த் நாயக் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவா், கங்கேயத்தில் தனது சகோதரா் பணியாற்றும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர கடந்த 22-ஆம் தேதி வந்துள்ளாா். இவருக்கு 18 வயது பூா்த்தியாகாததால் பணியில் சேராமல் அவரின் சகோதரரின் அறையில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், அறையில் இருந்து காடையூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளாா். சாலையைக் கடக்க முயற்சித்தபோது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தஷ்தகீா் (30) ஓட்டிவந்த காா் மோதியது.
இதில், படுகாயமடைந்த ஹேமந்த் நாக்கை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.