பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவா் கைது
பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடத்தை அடுத்த நாராயணநாயக்கன்புதூரைச் சோ்ந்தவா் பிரபு (36). இவரது வீட்டில் கடந்த 4 நான்களுக்கு முன்பு 7 கிராம் தங்க நகை, 2 காமாட்சி விளக்குகள் திருட்டுப்போயின.
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பிரபு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், நகையைத் திருடியது பல்லடம் பகுதியில் வேலை பாா்த்து வந்த தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த பாலமுருகன் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 7 கிராம் தங்க நகை, காமாட்சி விளக்குகளைப் பறிமுதல் செய்தனா்.