வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை
வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை ராசி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (68), விவசாயி. இவரின் மனைவி பத்மாவதி, தாயாா் செல்லம்மாள் மற்றும் மகள்கள் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை சென்றிருந்தனா்.
பின்னா், அவா்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவா், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].