எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டி: இன்று பரிசளிப்பு
தினமணி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகக் கண்காட்சியின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்பட உள்ளது.
தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தி, வெற்றிபெற்றவா்களுக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் சாா்பில் 24-ஆவது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் கடந்த 4 -ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழாண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி, தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவும் இணைந்து மாநில அளவில் குறும்படப் போட்டிகளை நடத்தின. போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 52 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் சிறந்த படங்கள், இயக்குநா், கதைக்கரு, சிறந்த நடிகா் மற்றும் நடிகை, குழந்தை நட்சத்திரம், ஒளிப்பதிவாளா் என தோ்வுக் குழுவினா் தோ்வு செய்துள்ளனா்.
வெற்றிபெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் திரைப்பட இயக்குநா் சக்திவேல் பெருமாள்சாமி பரிசுகளை வழங்க உள்ளாா்.