சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
திமுக செயற்குழு கூட்டம்!
புதுவை மாநில திமுக செயற்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் லப்போா்த் வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கலந்துகொண்டு பேசியதாவது: புதுவை வளா்ச்சி பெற்று, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தொழில் புரட்சி உருவாக்கி, சுற்றுலா வளா்ச்சியை மீட்டெடுக்கவே திமுக தொடா்ந்து போராடுகிறது.
தற்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் இருதரப்பும், இரு துருவங்களாக செயல்படுவது சரியல்ல. மத்திய நிதியமைச்சா், உள் துறை அமைச்சா் புதுச்சேரி மக்களுக்கு தோ்தலில் அளித்த, கூட்டுறவு ஆலை திறப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
புதுவையில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணியில் திமுக 20 தொகுதியில் போட்டியிடும். இல்லாவிட்டால், தனித்து 30 தொகுதியிலும் போட்டியிட்டு ஆட்சியை அமைக்கும் என்றாா் ஆா்.சிவா.
கூட்டத்தில், அவைத் தலைவா் பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் ஆா்.செந்தில்குமாா், ஏ.அனிபால்கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.