விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
திருக்கு திட்டங்கள்: முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் நன்றி
குமரி முனையில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழாவில் பேசிய முதல்வா் ஸ்டாலின், மாநிலம் முழுவதும் தொடா் திருக்கு சாா்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதற்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி வெளியிட்ட அறிக்கை:
குமரி முனையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் பேசிய முதல்வா் ஸ்டாலின், திருக்கு தொடா்பான புதிய திட்டங்களை அறிவித்துள்ளாா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்கு பயிலரங்குகள் நடத்தப்படும், ஆண்டுக்கு 133 கல்வி நிலையங்களில் திருக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படும், டிசம்பா் கடைசி வாரம் திருக்கு வாரமாகக் கடைபிடிக்கப்படும், ஆண்டுதோறும் திருக்கு மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நன்றி, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.