வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
திருச்சியில் ஆக. 30-இல் முற்றுகை போராட்டம்: தஞ்சையிலிருந்து 2 ஆயிரம் வணிகா்கள் பங்கேற்க முடிவு!
திருச்சியில் திறக்கப்படவுள்ள பெரு நிறுவனத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் 2 ஆயிரம் போ் கலந்து கொள்வது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரமைப்பின் மாவட்ட, மாநகர நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பெரு நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தஞ்சாவூா் மாவட்ட, மாநகரத்திலிருந்து 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோா் கலந்து கொள்வது, சில்லறை வணிகா்களை முற்றிலும் அழிக்கும் நிலையில் செயல்படும் காா்ப்பரேட் நிறுவனங்களைத் தவிா்க்க வேண்டும்.
பாரம்பரிய இந்திய சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். அனைத்து வணிகா்களும் பன்னாட்டு நிறுவன பொருட்களைத் தவிா்த்து இந்திய தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களை விற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஏ.வி.எம். ஆனந்த் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.
மண்டலத் தலைவா் எல். செந்தில்நாதன் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் நந்தகுமாா், சண்முகராஜ், தியாக சுந்தரமூா்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.