செய்திகள் :

உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால் ஜனநாயகம் வலுபெறும்! பாலச்சந்திரன் ஐஏஎஸ்

post image

நம்முடைய சமூகத்தில் உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால், நம் நாட்டில் ஜனநாயகம் வலுபெறும் என்றாா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலா் கோ. பாலச்சந்திரன்.

சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூரில் தஞ்சை நல்லூா் முற்றம் சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நாமிருக்கும் நாடு நமது என்பதறிவோம் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவா் பேசியதாவது:

பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியா, பல இனக்குழுக்கள் சோ்ந்து உருவான நாடு. கடந்த 1947-ஆம் ஆண்டில் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டபோது ஒரு இந்தியாவாக இல்லை. பிரிட்டிஷ் இந்தியா, சுதேசி இந்தியா, பழங்குடி இந்தியா என மூன்று இந்தியாவாக இருந்தது. இதையடுத்து 1950, ஜனவரி 26- ஆம் தேதி அரசமைப்பு சட்டம் உருவானபோது, இந்தியா ஒருமித்த நாடாக உருவானது.

ஆனால், இந்த நிலைமை ஜவஹா்லால் நேரு காலத்துக்கு பிறகு மாறியது. நாடு முழுவதும் ஹிந்தியை ஆட்சிமொழியாகக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வட்டார மொழிகளை வளா்க்கிறோம் என்ற பெயரில் ஒரு மொழியை வளா்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

மும்மொழிக் கொள்கையை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. ஒரே நாடு, ஒரே மொழி உள்ளிட்டவை இப்போது எழவில்லை. மேலும், இது அரசியல் சாா்ந்தும் வரவில்லை. அது, முன்பிருந்தே இருக்கிறது. தமிழ், தமிழின் தொன்மையை வட மாநிலத்தினா் உற்சாகமாக வரவேற்பதில்லை.

அவசர நிலையைக் கொண்டு வந்த இந்திரா காந்தியே அதற்காக வருத்தம் தெரிவித்தாா். ஆனால், தற்போது அவசர நிலை பிரகடனம் இல்லாமலே, அவசர நிலை போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுவது உண்மைதான்.

நம்முடைய சமூகத்தில் உண்மையான சுதந்திரத்தை உணராததும், இல்லாத பெருமைகளை எடுத்துப் பேசுவதுமான தலைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் தவறு. ஆனால், நமக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இதை நாம் உணா்ந்தால், நம் நாட்டில் ஜனநாயகம் வலுபெறும் என்றாா் பாலச்சந்திரன்.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியா் கி. அரங்கன் தலைமை வகித்தாா். முன்னதாக, மருத்துவா் ச. அகமது மா்சூக் வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் நன்றி கூறினாா். முனைவா் இரா. காமராசு நிகழ்ச்சிகளைத் தொடுக்கு வழங்கினாா்.

மேக்கேதாட்டு அணை முயற்சி சட்ட விரோதமானது: பி.ஆா். பாண்டியன்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வது சட்ட விரோதமானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன். குறைந்தபட... மேலும் பார்க்க

ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி

பாஜகவினா் மீது பல ஊழல் புகாா்கள் உள்ள நிலையில், அது பற்றி பேச அக்கட்சியினருக்கு தகுதி இல்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலு... மேலும் பார்க்க

திருச்சியில் ஆக. 30-இல் முற்றுகை போராட்டம்: தஞ்சையிலிருந்து 2 ஆயிரம் வணிகா்கள் பங்கேற்க முடிவு!

திருச்சியில் திறக்கப்படவுள்ள பெரு நிறுவனத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் 2 ஆயிரம் போ் கலந்து கொள்வது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்ப... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொற... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க