திருச்செங்கோடு பகுதியில் ரூ. 61.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2024 - 2025 இன் கீழ் ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்.
திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நாட்டாம் பாளையம், 58 கைலாசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பராயன்நகா், ஓ.ராஜபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மாருதி நகா், கருவேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆத்தூரம்பாளையம், தேவனாங்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட காந்திநகா் பகுதிகளில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்தல் பணிகள் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டன.
இதில் ஒன்றியக் குழுத் தலைவா் சுஜாதா தங்கவேல், திமுக ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், கொள்கைப் பரப்பு செயலாளா் நந்தகுமாா் மற்றும் கட்சி பொறுப்பாளா்கள், ஊராட்சி தலைவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.