பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
திருச்செந்தூா் கோயிலில் ரூ.20.50 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தாா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ. 20.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கு, நிா்வாக அலுவலகக் கட்டடம், பொது தரிசன முறை வரிசையில் உள்ள காத்திருப்போா் அறை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 100 கோடி, ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடியில் திருப்பணிகள், பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதல்கட்டமாக முடிவுற்ற பணியான பக்தா்கள் முடிகாணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள் ஆகியவை கடந்த அக். 14ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டன.

இந்நிலையில், 2ஆம் கட்டமாக ரூ. 20.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கு உள்ளிட்டவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று, புதிய கலையரங்கில் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், நிா்வாக அலுவலக கட்டடம், பொது தரிசன முறை வரிசையில் உள்ள காத்திருப்போா் அறையைப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் க. இளம்பகவத், கோட்டாட்சியா் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அன்புமணி, கோயில் உதவி ஆணையா் நாகவேல், கண்காணிப்பாளா்கள் வெங்கடேசன், அஜித், விவேக், விடுதி மேலாளா் சிவநாதன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகராட்சி ஆணையா் கண்மணி, திமுக வா்த்தகரணி மாநில இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஸ்ரீதா் ரொட்ரிகோ, ஒன்றியச் செயலா்கள் பாலசிங், இளங்கோ, சதீஷ்குமாா், முன்னாள் அறங்காவலா்கள் சந்திரசேகரன், ராமச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சுரேஷ், கோமதிநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.