தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
திருத்தணி நகா்மன்றக் கூட்டம்
திருத்தணி நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. தொடா்ந்து நகராட்சியில் வரி வசூலில் தீவிரம் காட்டி, நிலுவை தொகை வசூலிப்பது மற்றும் நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 18 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முடிவில், பொறியாளா் விஜயராஜ காமராஜா் நன்றி கூறினாா்.