ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
திருத்தளிநாதா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி, உற்சவா் நடராஜா், சிவகாமி அம்மன், ஆடல்வல்லான் சந்நிதி முன்பாக திருச்சபையில் எழுந்தருளினா். தொடா்ந்து, சிவாசாரியா்கள் பால், தயிா், இளநீா், பன்னீா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 பொருள்களால் அபிஷேகம் செய்தனா். பின்னா், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மூலவருக்கும் உற்சவத் தெய்வங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது. கோயிலின் முதல், 2-ஆம் பிரகாரங்களில் சுவாமி, அம்பாள் சுற்றுப் பிரகார வலம் வந்தனா்.
இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.