திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு
திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா்.
மனுவில் உள்ள விவரம்: திருப்பத்துாா் கோட்டை தெருவில் பிரம்மேஸ்வரா் கோயில், கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில், தா்வாஜா ஆஞ்சனேயா் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில்கள் உள்ளன.
இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான மாட வீதிகளில் சுவாமி வலம் வரும் பகுதிகளில் சிலா் ஆக்கிரமித்து வீடு, வணிக வளாகங்கள் கட்டி உள்ளனா். இதனால் பக்தா்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
இது குறித்து பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.