செய்திகள் :

திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு

post image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `தோமினிக் சாவியோ’ மேல்நிலைப் பள்ளியில், மாணவர் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் பயின்று வந்தார் முகிலன்.

இந்த நிலையில், `கடந்த 1-ம் தேதி காலை மாணவன் முகிலன் வகுப்புக்கும் வரவில்லை. விடுதியிலிருந்தும் மாயமாகிவிட்டார்’ எனப் பெற்றோரைத் தொடர்புகொண்டு பள்ளி நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மகன் வீட்டுக்கும் வராததால், பதறிப்போன பெற்றோர், திருப்பத்தூர் நகர காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மாயமான மாணவனைத் தேடத் தொடங்கினர்.

மாணவன் முகிலன்

இதையடுத்து, 3-ம் தேதி காலை தோமினிக் சாவியோ பள்ளி வளாகத்திலேயே உள்ள கிணற்றுக்குள் மாணவன் முகிலன் சடலமாக மிதந்ததைக் கண்டு அனைவருமே அதிர்ந்துபோயினர். கிணற்றின் மேல்பகுதி இரும்பு கம்பி வலையால் மூடப்பட்டிருப்பதால், `மாணவன் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம்?’ என்கிற சந்தேகம் வலுத்தது.

`மாணவன் சாவில் மர்மம் இருக்கிறது’ எனக்கூறி பெற்றோருக்கு ஆதரவாக அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சியினரும், இந்து முன்னணி போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் திரண்ட அ.தி.மு.க-வினர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். நேற்று முன்தினம் சாலை மறியல், நேற்று ரயில் மறியல் போராட்டம் என 2 நாள்களாக பதற்றமான சூழல் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மாணவன் சடலம்

இதைத் தொடர்ந்து, மாணவன் முகிலனின் குடும்பத்தினரிடம் காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சொந்தக் கிராமமான கொத்தூரில் மாணவனின் இறுதிச் சடங்கு நடைபெறுவதால், போலீஸார் அங்கேயும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து, மாணவன் மரணத்துக்காக காரணத்தைக் கண்டறியவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக். இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டிய... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் த... மேலும் பார்க்க

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இ... மேலும் பார்க்க

அழுது வீடியோ வெளியிட்ட CRPF பெண் காவலர்; "தாமதமாக FIR போட்டதாகச் சொல்வது பொய்" - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள பொன்னை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மகள் கலாவதி (வயது 32), ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் காவலராக தேசப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குடும்பக் கட்டுப்பாடு செய்ய வற்புறுத்தல்? பெண் புகார்; அரசு மருத்துவமனை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலூர், சுக்காவழி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் அரசு... மேலும் பார்க்க