நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் குழந்தைகளுடன் இரவு உணவு உண்டபின் மனைவி பாரதி, அனிஸ்வரன்(1) ஆண் குழந்தையுடன் படுக்கையறையில் உறங்கச் செல்ல, கோவிந்தராஜ் மற்றும் அவரது 3 பெண் குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
திடீரென்று அதிகாலை 3 மணி அளவில் கோவிந்தராஜ் தனது மனைவி உறங்கிக் கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு ஹாலில் படுத்திருந்த 3 பெண் குழந்தைகளை அரிவாளை கொண்டு தலைப்பகுதியில் வெட்டி துண்டித்து கொலை செய்து, பின்னர் அவரும் அருகாமையில் இருந்த பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரித்திகா ஸ்ரீ(7), தேவா ஸ்ரீ(6) உள்ளிட்ட மூன்று பெண் குழந்தைகளின் சடலம் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக காவல் துறையின் விசாரணையில் கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டு கடன் காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
அதற்கு முறையாக பணம் கட்ட முடியாத நிலை தற்போது இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. மூன்று பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.