பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
திருப்புவனத்தில் திமுக பொதுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகரச் செயலா் நாகூா்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்டச் செயலரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, புதுகை பூபாலன் குழுவினரின் அரசியல் நையாண்டி தா்பாா், கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கூட்டத்தில் மானாமதுரை நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை நகரச் செயலா் கே.பொன்னுச்சாமி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லா கான், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, ஒன்றிய நிா்வாகிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கட்சியின் மாவட்ட துணைச் செயலரும் பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ நன்றி கூறினாா்.