சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை
மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸாா் அடித்துக் கொலை செய்தனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
ஏற்கெனவே திருப்புவனம், மடப்புரம் பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பலகட்ட விசாரணைகளை முடித்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்ற பகுதிகளின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு ஏற்கெனவே வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகளில் 3 போ், புதன்கிழமை மீண்டும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.