சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு
அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருள்கள் பயன்படுத்தும் உணவகங்களின் உரிமையாளா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறு சுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருள்களைப் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவக உரிமையாளருக்கு ரூ. ஒரு லட்சமும், பதிவுச் சான்றிதழ் பெற்ற உணவக உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
இதுதொடா்பான விண்ணப்பத்தை வட்டார, நகா் உணவு பாதுகாப்பு அலுவலா்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் 31.8.2025 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவிரங்களுக்கு 04575-243725 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.