திருமுல்லைவாசலில் இன்று முதல் 3 நாள்கள் ஆதாா் சிறப்பு முகாம்
திருமுல்லைவாசல் கடற்கரை கலையரங்கில் புதன்கிழமை (செப்.10) முதல் செப்.12-ஆம் தேதி வரை ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதில், பொதுமக்கள் புதிதாக ஆதாா் பதிவு, பழைய ஆதாா் அட்டையில் பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம். புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய ரூ.50, கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், முகாமில் அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை பொதுமக்கள், மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.