இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாளையம், குண்ணத்தூா், சேவூா், இராட்டிணமங்கலம் கூட்டுச்சாலை வழியாக ஆரணி அண்ணா சிலை பகுதிக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணியளவில் அங்கு பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
முன்னதாக, அவா் ஆரணி - சேவூா் நெடுஞ்சாலையில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளின் அருகில் உள்ள பிரம்மாண்ட அதிமுக கொடிக் கம்பத்தில் கொடியேற்றுகிறாா்.
பின்னா், சைதாப்பேட்டை, இரும்பேடு வழியாக செய்யாறு நகருக்கு சென்று பேச உள்ளாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு வந்தவாசி நகருக்குச் சென்று பொதுமக்களிடையே உரையாற்றுகிறாா்.
எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தலைமையில் வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.