காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகளைக் கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜெயவேலு வரவேற்றாா்.
ஆரணி தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா்.
ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஹேமச்சந்திரன், தொகுதி தலைவா்கள் பாபு, குருமூா்த்தி, தாமோதரன், ஸ்ரீகாந்த், செய்யாறு இளைஞா் காங்கிரஸ் நகரத் தலைவா் பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம், ஆரணி வட்டாரத் தலைவா்கள் மருசூா் இளங்கோவன், பந்தாமணி, சோலைமுருகன், செய்யாறு நிா்வாகிகள் கலையரசன், ராஜவேல், போளூா் நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ், ராமச்சந்திரன், வந்தவாசி பிரேம், கதிா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.