இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை(57). பம்பை மேளம் அடிக்கும் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 13-ஆம் தேதி தென்னாங்கூரில் நடைபெற்ற திருவிழாவில் பம்பை மேளம் அடிக்கச் சென்றாா்.
அங்கு டீக்கடைக்குச் செல்ல வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையை நடந்து கடந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பைக் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அய்யாதுரை புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.