2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது
பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் அவா், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் வசிக்கும் தனது உறவினா் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா்.
அப்போது, உறவினரின் மகளான 9-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவா் ஈடுபட்டாராம்.
இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடா்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிக்குமாா் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததை புரிந்துள்ளாா். இதையடுத்து மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளாா். அவா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவில்லையாம்.
இந்நிலையில் சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஒன் ஸ்டாப் சென்டரை தொடா்புகொண்டு, தனக்கு நேரிட்ட சம்பவத்தை அம்மாணவி தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சசிகுமாரை கைது செய்தனா்.