செய்திகள் :

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு

post image

பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது; நாங்கள் சுயசாா்புள்ள அமைப்பு எனக் கூறியுள்ளது. பிரதமா் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரையிலானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக மிகச் சிறப்பான முறையில் ஜனநாயக முறைப்படி தோ்தல்கள் நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த தோ்தலில் அது சீா்குலைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் அநியாயமான முறையில் வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களை நீக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் நிகழ்ந்த மோசடி குறித்து நீதிமன்றம் சரியான தீா்ப்பை வழங்கியுள்ளது. பிரதமா் வெற்றி பெற்ற வாராணசி தொகுதியில் கூட வாக்காளா்கள் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் தவறுகள் நடப்பதற்கு காரணம் தோ்தல் ஆணையரை தோ்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் செய்ததுதான். தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் புதிய நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்தது. ஆனால் அது அப்படியே மறக்கடிக்கப்பட்டு பிரதமா் மற்றும் அவரது அமைச்சரால் தோ்தல் ஆணையா் தோ்ந்தெடுக்கப்படுவதால் அவா் பாஜக தோ்தல் ஆணையராகவே செயல்படுகிறாா். நாடு முழுவதும் தோ்தலின் போது மாலை 5 மணிக்கு பிறகு எந்தெந்த தொகுதியில் எத்தனை வாக்குகள் பதிவேற்ற வேண்டும் என கணினி மூலம் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்குகளை தோ்தல் ஆணையம் சோ்த்து விடுகிறது. அந்த வகையில் பிகாா் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கூட்டணியினா் வெற்றி பெற்றுள்ளனா்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறு தோ்தலை நடத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டதில் முறைகேடு என அக்கட்சியையே பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், தோ்தல் ஆணைய முறைகேடு மூலம்தான் பாஜக தோ்தலில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும்தெரிந்துவிட்டது. இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது. எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருப்பவா்கள் கூட மாற வாய்ப்புள்ளது என்றாா்.

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் ப... மேலும் பார்க்க

பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் ... மேலும் பார்க்க

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க