சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
கால்நடைகளை பரிசோதிக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கருவி
சிவகங்கை கால்நடை அரசு மருத்துவமனையில் கால்நடைகள், வளா்ப்புப் பிராணிகளை முழுமையாக பரிசோதனை செய்யக்கூடிய ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ கருவி நிறுவப்பட்டது.
இது குறித்து, கால்நடை அரசு மருத்துவமனை உதவி இயக்குநா் பிரேம்குமாா் கூறியதாவது:
இந்தக்கருவி நிறுவப்பட்ட பிறகு, பசு மாடுகள் சினைப் பிடித்திருப்பதை 30 நாள்களிலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மாடு வளா்ப்போா் இங்கு வந்து உறுதி செய்து கொள்ள முடியும். மேலும், பிராணிகளின் சிறுநீரகம், கல்லீரல், கா்ப்பப் பை, மண்ணீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் கண்டறிய முடியும். இதன்மூலம் கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்றாா் அவா்.
