சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை ஆலங்குளம், இளையான்குடி சாலைகிராமம் கண்மாய், காரைக்குடி சிவன்கோவில் ஊருணி, தேவகோட்டை சிலம்பனி ஊருணி, சிங்கம்புணரி ஊருணி ஆகிய இடங்களில் மட்டும் விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.