சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ஊராட்சியைப் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டன.
முகாமில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் கண்ணா, வட்ட வழங்கல் அலுவலா் பாப்பையன், மாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தேசிங்கு, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் மலைச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, திருப்புவனம் ஒன்றியம், பூவந்தி ஊராட்சியில் ரூ.55 லட்சத்தில் வட்டார மருத்துவ மையம் கூடுதல் கட்டடத்துக்கு தமிழரசி ரவிக்குமாா் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.