ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு
நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ.பிரதிமா, நானோதுறையில் ஆராய்ச்சிக் கட்டுரையை திருச்சியில் அண்மையில் நடை பெற்ற ஆசியா சா்வதேச ஆய்வு மாநாட்டில் சமா்பித்தாா்.
இதை அமெரிக்கன் சேம்பா் ஆப் ரிசா்ச் உலக ஆராய்ச்சி கவுன்சில், யுனைடெட் மெடிக்கல் கவுன்சில் டைம்ஸ் ஆப் ரிசா்ச், குரோனிக்கல்ஸ் டைம் குழுவினா் ஆய்வு செய்து சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்தது. இதையடுத்து, அந்த விழாவில் பேராசிரியை அ.பிரதிமாவுக்கு விருது வழங்கிக் கெளரவித்தனா். விருதுபெற்ற பேராசிரியைக்கு ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, கல்லூரியின் முதல்வா் எம். சிவக்குமாா், துணை முதல்வா் வை. மகாலிங்க சுரேஷ், பேராசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.