சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காரைக்குடியில் ஏஐடியூசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்ற அவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும், தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்ய உத்தரவிட்டதைக் கண்டித்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி சங்கத்தின் மாநகரத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மீனாள் சேதுராமன், மாவட்ட பொதுச் செயலா் ஆகா. ராஜா, உள்ளாட்சிப் பிரிவு மாநில துணைத் தலைவா் பிஎல். ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் கண்ணன், மாநகரச் செயலா் ராமராஜ், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.