கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் திருப்பத்தூா் வட்டார அளவிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியை முன்னாள் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் முருகப்பராஜா தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை கமலம் முன்னிலை வகித்தாா்.
இந்தப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 14, 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவிலும்,
19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவிலும் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளி முதலிடத்தைப் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் வெங்கடாச்சலம் , உடல்கல்வி ஆசிரியா்கள் எம்.எஸ்.வாசு, மூா்த்தி, அழகுமீனாள் ஆகியோா் பாராட்டினா்.