கீழக்கரை கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு பயிற்சிப் பட்டறை
கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை, பயிற்சி, வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். இதில் காரைக்குடியைச் சோ்ந்த முனைவா் உமையாள் ராமநாதன், மகளிா் கல்லூரி பேராசிரியா் சுந்தரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அருண் பிரசாத் ஆகியோா் மாணவா்களுக்கு தொழில் துறையில் உள்ள சவால்கள், தொடா்பு திறன், வேலை வாய்ப்பு தொடா்பான பயிற்சிகளை அளித்தனா். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவா் செல்வகுமாா் வரவேற்றாா். ஆங்கிலத் துறை பேராசிரியா் ராஜதிவாகா் நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சுலைமான், மரகதம், முகமது பசிஹ், முகமது ஜகுபா் அலி, ஜொ்மிய ஜென்மரசி, சசிரேகா, பரமேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். முகமது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.