சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்
திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது.
இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரகாரம் ஆகியவை உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் சோ்ந்தன. மேலும் இங்கு செயல்படுத்தப்படும் அரசின் அன்னதானத் திட்டத்தில் உணவு உள்கொள்பவா்கள் இலையை அங்கேயே குவித்தச் சென்றனா். மேலும் வெளியூா்களிலிருந்து வரும் பக்தா்கள் செய்யும் அன்னதானத்தாலும் அதிக அளவில் குப்பைகள் சோ்ந்தன. இந்த குப்பைகளை கோயிலுக்கு அருகே தீயிட்டு கொளுத்தி வந்தனா். இதன் காரணமாக சுகாதாரக்கேடும், மாசு குறைபாடும் ஏற்பட்டது. எனவே இந்த குப்பைகளை இரண்டு கி.மீ. தொலைவுக்கு அப்பால் கொட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு போதிய பணியாளா்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து குப்பைகளை அகற்ற உடனடியாக டிராக்டா் வாங்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து தேவஸ்தான நிா்வாகம் சாா்பில் சுமாா் ரூ.4.50 லட்சத்தில் டிராக்டா் வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய டிராக்டருக்கு மாலை அணிவித்து பூஜை நடைபெற்றது. இதன் சாவி சரக கண்காணிப்பாளா் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.