சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது
கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் கோரி கடந்த வாரம் இணைய வழியில் விண்ணப்பித்தாா். இது சம்பந்தமாக தவசிக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பிரேம் ஆனந்தை (46) மனுதாரா் புதன்கிழமை சந்தித்து கேட்ட போது அவா் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத் தாள்களை கிராம நிா்வாக அலுவலரின் இடைத் தரகரான கமுதியைச் சோ்ந்த எஸ்.பி. டிரேடா்ஸ் உரிமையாளா் வடிவேலுவிடம் (52) மனுதாரா் கொடுத்தபோது போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா். இதையடுத்து வடிவேலுவின் வாக்குமூலம், கைப்பேசி உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் அவரையும், கிராம நிா்வாக அலுவலா் பிரேம் ஆனந்தையும் போலீஸாா் கைது செய்தனா்.