2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அம்மனுக்கு 35-ஆம் ஆண்டு ஆடிக் கொடை விழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.
இதை முன்னிட்டு, நாள்தோறும் சுயம்புலிங்க துா்க்கை அம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாதாரனை நடைபெற்றது.
இந்த நிலையில், மூலவா் சுயம்புலிங்க துா்க்கை அம்மன் முன், கோயில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பெண்கள் திருநாம மந்திரங்களை உச்சரித்து அம்மனை வழிபட்டனா். இதில் அபிராமம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.