மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு
திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா்.
அப்போது 79 மாணவ, மாணவிகள், தேசப் பற்றுமிக்க வளரும் சமுதாயத்தை சீா்படுத்தும் 79 உறுதிமொழிகள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி, 79 எண் வடிவிலும், இந்திய வரைபட வடிவிலும் நின்று உறுதிமொழி எடுத்து 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்றனா். இந்த நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் ஜெ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். காரைக்குடி குருதிக் கொடையாளா் அறக்கட்டளையின் இணைச் செயலா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். முன்னதாக பள்ளியின் முதன்மை முதல்வா் சு. யாஸ்மின் பரிதா வரவேற்றாா். தலைமை ஆசிரியை சுகந்தி நன்றி கூறினாா்.
