சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி
ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தாா். பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். இதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ளுதல், இதற்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், பழக் கன்றுகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை மானிய திட்டத்தின் கீழ் வழங்குவது குறித்தும், பயிரிடும் முறை, தண்ணீா் பாசன முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக வேளாண்மைத் துறை மூலம் வேளாண் பயன்பாடுகள் குறித்த கண்காட்சியை பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் பாா்வையிட்டாா். இதில், வேளாண்மைத் துறை துணை இயக்குநா்கள் ராஜேந்திரன், வாசுகி, அமா்லால், ஆறுமுகம், மல்லிகா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் முத்துக்குமாா், விதை ஆய்வு துணை இயக்குநா் இபுராம்சா, வேளாண் உதவி இயக்குநா் ராஜலட்சுமி, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வள்ளல் கண்ணன், வேளாண் வணிக துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், விதைச் சான்றளிப்பு துறை உதவி இயக்குநா் சிவகாமி, முன்னோடி விவசாயி நாகலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.