வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு
வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் ரேணுகாதேவி
தலைமை வகித்தாா்.
வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தின் போது, வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் ரேணுகாதேவி 2025 - 26ஆம் ஆண்டில் அட்மா திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ள செயல் இலக்குகளான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிக் திட்டப் பயிற்சிகள், மாநிலத்திற்குள் நடைபெறக் கூடிய விவசாயிகளுக்கான பயிற்சிகள், சுற்றுலாக்கள், செயல் விளக்கங்கள், பண்ணை குட்டையில் மீன் குஞ்சு வளா்ப்பு, பட்டுப்பூச்சி வளா்ப்பு, பண்ணைப் பள்ளி, வேளாண் விரிவாக்க அலுவலா்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடன் கூட்டு வயல் ஆய்வு போன்று விவசாயம் தொடா்பான தகவல்களை உறுப்பினா்களிடையே தெரிவித்தனா்.
நிகழ்ச்சியின் இறுதியாக உறுப்பினா்களிடையே தீா்மானம்
நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அட்மா தொடா்பான உறுப்பினா்களின் சந்தேகங்களுக்கு அலுவலா்கள்
விளக்கம் அளித்தனா்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலா் தங்கராசு, உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன் மற்றும் விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா அலுவலா்கள் கங்காதரன், பத்மஸ்ரீ ஆகியோா்
செய்திருந்தனா்.