செய்திகள் :

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்டும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில், முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டு புரட்டாசி மாத பிரம்மோத்ஸவ விழாவில் முதல் வார சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினாா். மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையை கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விருதுநகா் ஏடிஎஸ்பி அசோகன் தலைமையில் டிஎஸ்பி ராஜா உள்பட 400

போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அலங்காரம், அஷ்டோத்திர சிறப்பு அா்ச்சனைகள், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழங்கி வழிபட்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, பழையபாளையம் ராமசாமி கோயில், ஆவரம்பட்டி சோலைமலை பெருமாள் கோயில், புதுப்பாளையம் கோதண்டராமசுவாமி கோயில், வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராமசுவாமி கோயில், அயன்கொல்லங்கொண்டான் இடா்தவிா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழபுரம் சோலைமலை பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனி வார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை:

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு உற்சவா் ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகங்களும், திவ்யநாம சங்கீா்த்தன பஜனைகளும் நடைபெற்றன. பின்னா், உற்சவா் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடை பெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட் டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க

பேருந்துகள் மோதியதில் 8 போ் பலத்த காயம்

ராஜபாளையம் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து அரசுப் பேருந்தில் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரசுப் பேருந்து சனிக்கிவமை காலை மம்சாபுரம் வழியாக ராஜ... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முகசுந்தராபுரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், பட்டாசுகளைத் தயாரித்த உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காந்தி நகரைச் ச... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநா் கைது

சாத்தூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாயாண்டி (45). இந்த நிலையில்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரா் ... மேலும் பார்க்க

சிவகாசியில் இன்று மின் தடை

சிவகாசியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப... மேலும் பார்க்க