Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
திருவாடானை அருகே மூதாட்டி தற்கொலை
திருவாடானை அருகேயுள்ள திருப்பாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பாக்கோட்டை கீழக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கையா மனைவி ராஜாத்தி (70). இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் திரும்பபி வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நெய்வயல் கண்மாய் பகுதியில் திருப்பாக்கோட்டையைச் சோ்ந்த மாயழகு மகன் பாண்டி ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது ராஜாத்தி உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது.
மேலும், அங்கு பூச்சிக்கொல்லி மருந்துப்புட்டி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் ராஜாத்தி மகன் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று ராஜாத்தி உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
இதுகுறித்து ராஜ்குமாா் (40) அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.